கரைதலின் நிமித்தம்


டலை சமுத்திரம் என்றே சொல்வார் அப்பா
சமுத்திரம் பற்றி பேசுவதற்கு அப்பாவிடம் கதைகள் இருந்தன
ஒரு முறையும் கால் நனைத்ததில்லை.
ஒரு நாளில் வலுக்கட்டாயமாக அலைகளில் நிறுத்தியதில் 
'அடேய்...ஊ' என்ற குதூகலித்த குழந்தையாய் 
குரல் எழுப்பி இறுக கைகளை பற்றிக் கொண்டார். 
அன்றைய நாளில் சென்ற நிலமெங்கும் சமுத்திரம் இருப்பதாய்
கைகளை பற்றிக் கொண்டே நடந்து வந்தார்.
இரவில் கைகளை கோர்த்துக் கொண்டே உறங்கினார்.
அன்றிலிருந்து சில கதைகள் சேர்த்துக் கொண்டன. 

சமுத்திர கரையோரம் பெரியண்ணன் தோளின் பின்னே எறிய
இரு கைகளாலும் பிடித்து கொள்ளவேண்டும் 
போலிருக்கிறது அப்பாவின் அஸ்தி கலசத்தை.

நன்றி : குங்குமம்

No comments: