ரகசிய அழைப்பு


காலணிகளை வெளியே 
கழட்டிவிட வேண்டாம் என்றாய் 
சப்தம் எழுப்பாமல் கதவுகளை 
தாழிடப்படுவதற்குள் தெருமுனை 
வரை சென்று வருகிறது உன் பார்வை 
கதவடைத்த பின் நெகிழ்ந்த உன் தேக சுவாசம் 
என்னை இறுக்கி கொள்கிறது 
உறிஞ்சலில் தொடங்கி 
களைப்பில் கலைந்து கிடக்கும் உன்னை 
பார்த்துக்கொண்டே நீள்கிறது நமக்கான காமம் 

பின் மதியம் எழுந்து கொள்ளும் நீ 
வரப்போகும் குழந்தை/கணவனு-க்கு 
சமைப்பதிலும்  தொ.கா தொடரிலும் கலந்து போவாய் 
இரவு கலவியில் மிச்சங்களை 
தேடி தோற்றும்போவாய்.

பிறிதொரு ரகசிய அழைப்பு வரும் வரை
உன் ஞாபக பிசுபிசுப்பில் கடந்து போகும் 
எனக்கான இரவுகள். 



நன்றி : தகிதா 

8 comments:

செய்தாலி said...

ரகசிய அழைப்பு

உறவில் ''கள்ளம் ''

கவிதை அருமை கவிஞரே

கமலேஷ் said...

எப்போதும் படிச்சிட்டு அமைதியா போய்டுவேன்...
ஆனா இன்னைக்கி......
அய்யய்யோ....... கவிஞரே.....

திருநாவுக்கரசு பழனிசாமி said...

காமம் கள்ளம் அறியாது என்பது சரிதானோ..மொழியின் அழகில் கள்ளம் சற்று மறைந்துதான் போகிறது கவிதையில்

சத்ரியன் said...

உள்ளத்தில் ‘கள்ள’ உள்ளம் உறங்காதென்பது ‘ரகசிய அழைப்பில்’ அருமையா பதிவு செய்திருக்கீங்க, வேல் கண்ணன்.

பத்மா said...

arumai kannan

rvelkannan said...

நண்பர் செய்தாலி,
நண்பர் கமலேஷ்
நண்பர் திரு
நண்பர் சத்ரியன்
நண்பர் பத்மா
தங்களின் வருகைக்கும் கைகுலுக்களுக்கும் நன்றியும் அன்பும்

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

இது எப்ப்டிங்ணா பார்வைல படாம தப்சிட்ச்சு?

வேல் கண்ணணா? கள்ளனா?

செருப்பு வுட்றதுலருந்து இன்னாமா ப்ளான் பண்ணீருக்கீங்கண்ணா ரசனையா?

கல்யாணி சுரேஷ் said...

Mmmm.....